ETV Bharat / state

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்; இறைச்சி சப்ளை செய்த நபர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 8:30 PM IST

Namakkal Shawarma: நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த உணவகத்திற்கு இறைச்சி சப்ளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் இறைச்சி சப்ளை செய்த நபர் கைது

நாமக்கல்: பரமத்தி சாலையில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த சனிக்கிழமை (செப்.16) இரவு உணவு உட்கொண்ட 43 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதையடுத்து சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில், ஷவர்மா தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட இயந்திரம் சுகாதாரமற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்றவை விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று (செப்.19) உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. தொடர்ந்து, நாமக்கல், சேலம் சாலையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் காய்கறிகள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும், கெட்டுப்போன இறைச்சி மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்த உணவகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டதில், குறைபாடு உள்ள 10 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

ஏற்கனவே நேற்று, தனியார் உணவகத்தின் உரிமையாளர் நவீன்குமார், சஞ்சய் மககுத் மற்றும் தபாஷ் குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்து நாமக்கல் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சூழலில், அந்த உணவகத்திற்கு இறைச்சி சப்ளை செய்த கோனார் இறைச்சி கடை உரிமையாளர் சீனிவாசன் தற்போது நாமக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக கூறி வடமாநிலத்தவர்கள் கடத்தல்.. 7 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.