ETV Bharat / state

அதிமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: மநீம வேட்பாளர் - THANGAVEL

நாமக்கல்: அதிமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதி ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என நாமக்கல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்
author img

By

Published : Mar 26, 2019, 8:21 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இறுதி நாளான இன்று, நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவேல் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆசிய மரியத்திடம் வேட்பு மனுவை வழங்கினார். இவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.

வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கவேல், தான் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தில் 37 வருடமாக பணியாற்றி வருகிறேன். மாநில செயற்குழு உறுப்பினராகவும் நாமக்கல் சேலம் மாவட்டத்தின் மண்டல பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.

முட்டை குளிர்சாதன மையம் அமைக்கப்படும், கொசவபட்டி ஏரியை தூர் வாரப்படும், ஆட்டோ நகரமாக மாற்றப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை கூறிய ஆளும் அதிமுக அரசு அதில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகவும், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ராசிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Intro:நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு மக்கள் நீதிமன்றம் மையம் சார்பில் தங்கவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Body:ஏப்ரல் 18 தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இறுதி நாளான இன்று பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் தங்கவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவை நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆசியா மரியத்திடம் வழங்கினார் .இவர் கோவையைச் சேர்ந்த இவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் தங்கவேல் தான் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் 37 வருடமாக பணியாற்றி வருகிறேன். மாநில செயற்குழு உறுப்பினராகவும் நாமக்கல் சேலம் மாவட்டத்தின் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றேன். முட்டை குளிசாதன மையம் அமைக்கப்படும்,கொசவபட்டி ஏரியை தூர் வாரப்படும்,ஆட்டோ நகரமாக மாற்றப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை ஆளும் அதிமுக அரசு ஒன்று கூட நிறைவேற்றவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் இது போன்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக ராசிபுரத்தில் சாலை புறவழி சாலை அமைக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் கோவை மாவட்டத்தைச் சார்ந்த நீங்கள் இங்கு உள்ள பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை எனக்கு புதிதல்ல பலமுறை நான் இங்கு வந்துள்ளேன் அதனால் இங்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் நான் அறிந்துள்ளேன்.நிச்சயமாக வருகின்றனர் தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.

Conclusion:இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.