ETV Bharat / state

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல் - போலீசார் குவிப்பு

நாமக்கல்: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல்
author img

By

Published : Apr 25, 2019, 7:36 AM IST

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 4,792 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 290 பேர் பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கத்தின் 2019-21ஆம் ஆண்டுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்புமனுத் தாக்கல் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைப் பொருளாளர் ஆகிய ஐந்து பதவிகளுக்கும் 50 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது.

தற்போது தலைவராக இருக்கும் வாங்கிலி, மீண்டும் அதே பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து சேகர் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோன்று செயலாளர் பதவிக்கு ரவி என்பவரும், தற்போது செயளாராக இருக்கும் அருண் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோன்று பொருளாளர் பதவிக்கு தற்போதுள்ள சீரங்கனும், அவரை எதிர்த்து சுப்பிரமணி என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி பிரிவினர், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அதனால், தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் இருதரப்பிற்கும் பிரச்னை ஏற்படும் சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி, காவல்துறையினர் லாரி சங்க அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 24

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது .பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 4792 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் 290 பேர் பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவது நிர்வாகிகள் பிரச்சினை வருவதும் வழக்கம். இந்த நிலையில் தற்போது தலைவராக இருக்கும் வாங்கிலியின்  தலைவர் பதவியை எதிர்த்து முன்னாள் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் சங்க நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றத்தில் ஆணை வழங்கியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த சங்க நிர்வாக பணிகள் தற்போது  வரைநடைபெறவில்லை.

இந்த நிலையில்  2018 -2021 ஆம் ஆண்டுக்கான தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 5 ஆம்தேதி 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

 அதற்காக இன்று வேட்புமனு தாக்கல் சங்க அலுவலகத்தில் சேலம் சாலையில் நடைபெற்றது. இதில் தலைவர் செயலாளர் பொருளாளர் துணைத்தலைவர் துணைப் பொருளாளர் ஆகிய ஐந்து பதவிகளுக்கும் 50 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். இன்று தற்போது உள்ள தலைவர் வாங்கிலி தலைவர் பதவிக்கு எதிர்தரப்பாக தலைவர் பதவிக்கு சேகர் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோன்று செயலாளர் பதவிக்கு ரவி தற்போது அருண் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோன்று பொருளாளர் பதவிக்கு தற்போதுள்ள சீரங்கன் அவரை எதிர்த்து சுப்பிரமணி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி பிரிவினர் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் தற்போது மும்முரமாக தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் இருதரப்பிற்கும் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் லாரி சங்க அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 தேர்தல் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுவதால் இனி வரும் காலங்களில் 4792 லாரி உரிமையாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

Script in mail
Visual in ftp

File name : TN_NMK_03_24_LORRY_GROUP_NAMINATION_VIS_7205944 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.