நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அடுத்துள்ள களியனூர் ஒன்றியத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் வேப்பங்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள மீன்களைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றுள்ள ஒப்பந்ததாரர்கள், மின்மோட்டார் கொண்டு ராட்சதக் குழாய் மூலம் இரவு நேரங்களில், ஏரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோடைகாலத்தில் அப்பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஏரியிலிருந்து, மீன் பிடிப்பதற்காக நீர் வெளியேற்றப்படுவது வேதனையளிப்பதாக, அப்பகுதி விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒப்பந்ததாரருக்கு மீன் பிடிக்க மட்டுமே அனுமதி உள்ள நிலையில், சட்ட விரோதமாக மின்மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : அழகுக்கலை நிலையங்களை திறக்க கோரிக்கை