நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக உள்ள கொல்லிமலையில் மக்கள் மிகவும் விரும்பக்கூடிய ஆகாய கங்கை அருவி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருவதால், ஆகாய கங்கையில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால் மேலிருந்து கற்கள் விழ வாய்ப்புள்ளது எனவே பொது மக்களின் நலன் கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தடையானது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.