ETV Bharat / state

பெயர் பலகை கம்பத்தில் மோதி விபத்து: கேரள இளைஞர்கள் உயிரிழப்பு - தேசிய நெடுஞ்சாலை விபத்தில் கேரள இளைஞர்கள் உயிரிழப்பு

நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை கம்பத்தில் மோதிய கார் விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Kerala youngers death in accident in Namakkal National Highways

author img

By

Published : May 30, 2020, 11:56 AM IST

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜினு வர்கீஸ், ஜிஜோ தாமஸ் ஆகிய இருவரும் கார் மூலம் பெங்களூரு சென்றுவிட்டு நாமக்கல் வழியாகச் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது கார் நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது சாலையின் நடுப்பகுதியில் உள்ள பெயர் பலகை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஜினு வர்கீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Kerala youngers death in accident in Namakkal National Highways
கேரள இளைஞர்கள் உயிரிழப்பு

படுகாயமடைந்த ஜிஜோ தாமஸை அருகிலிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க... கேரள இளைஞருக்கு வேப்பமரத்தடியில் சிகிச்சை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.