நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு. ஆசியா மரியம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், அதிமுக வேட்பாளர் பி. காளியப்பன் தனது சொத்து மதிப்பில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் தனக்கு ஒப்பந்தம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் திமுக தலைமை கழக வழக்கறிஞர் நீலகண்டன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
இதையடுத்து, அதிமுக தரப்பில் உரிய விளக்கம் அளித்தபிறகு அதிமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, "அதிமுகவின் மாவட்டச் செயலாளராக ஆட்சியர் ஆசியா மரியம் செயல்படுகிறார் என்றும், அதிமுக வேட்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.