நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி போடும் மையம், சிகிச்சை மையம், மருத்துவமனையில் செயல்பட்டுவரும் பல்வேறு பிரிவுகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை இணைச் செயலர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனரா என மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சுகாதாரத் துறை இணைச் செயலார் நடராஜன் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:பயன்பாட்டிற்கு வந்த 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்!