ETV Bharat / state

மாணவர்களிடம் முறைகேடாக பல கோடி ரூபாய் வசூல்: ஐ.டி. சோதனை நிறைவு! - it raid at green park

நாமக்கல்: கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களுக்குள்பட்ட இடங்களில் நடைபெற்றுவந்த வருமானவரித் துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

green
author img

By

Published : Oct 14, 2019, 3:26 PM IST

Updated : Oct 14, 2019, 4:43 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், நீட் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் மேற்படி தொழில், கட்டுமானம், கல்வி நிலையங்கள்- அதன் உரிமையாளர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

வருமானவரித் துறைக்கு, பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும் முறைகேடாகவும் கட்டணம் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோரிடம் கொடுக்கும்போது ஒரு கட்டண ரசீதும் பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான கட்டண ரசீதுகளும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத சுமார் 30 கோடி ரூபாய்வரை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

IT Raid Visuals

மேலும் பினாமிகள், ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியவை, புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியவை என கணக்கில் காட்டப்பட்டு சுமார் 150 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு உள்ளது குறித்தும் வருமானவரித் துறையின் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமானவரித் துறையினரின் சோதனை நிறைவடைந்துள்ளது.

இதையும் படிங்க: நீட் பயிற்சி மையங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை!

Intro:Body:மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த 180 கோடிகள்; 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து 4வது நாளாக நடந்துவரும் வருமானவரிச் சோதனை.கைப்பற்றப்பட்ட பணத்தின் புகைப்படம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வருமானவரித் துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் நீட் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11.10.19 ம் தேதி முதல் சோதனைகள் நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் மேற்படி தொழில், கட்டுமானம்,கல்வி நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர் தொடர்பான வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

வருமான வரித்துறைக்கு, பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும், முறைகேடாகவும் கட்டணங்கள் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோர்களிடம் கொடுக்கும் போது ஒரு பில்லும், பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான பில்களும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் பள்ளியின் ஊழியர்கள், மற்றும் பள்ளி வளாகங்கள் என கணக்கில் வராத சுமார் 30 கோடிகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பினாமிகள், பல்வேறு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியவை மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிகவை என கணக்கில் காட்டப்பட்டு சுமார் 150 கோடிகள் வரை உள்ளது குறித்தும் வருமானவரித் துறையின் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா நகரில் உள்ள கீரின் பார்க் அலுவலகம் விஷ்வல்Conclusion:
Last Updated : Oct 14, 2019, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.