தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பினால் இ-பாஸ் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள், உணவகங்கள், லாரிப் பட்டறைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த 723 தொழிலாளர்கள், கல்லூரிகளில் பயின்ற 137 மாணவர்கள், கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய 604 தொழிலாளர்கள் என ஆயிரத்து 464 பேர், அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல இ-பாஸ் மூலம் விண்ணப்பித்தனர். அவர்கள் பிகார் மாநிலம், திரும்ப அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.
ரயிலுக்குத் தயாராாக இருக்கும் தொழிலாளர்கள் இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலில் பயணம் செய்யும் அனைவருக்கும் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அருளரசு, அரசு அதிகாரிகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மெகராஜ், 'நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 137 மாணவர்கள் உட்பட 864 பேரும் சிறப்பு ரயில் மூலம், பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த 600 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரத்து 300 பேர் சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களும் ஓரிரு வாரங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட' உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், பிற மாநிலங்களில் இருந்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும்; மேலும் 600 பேர் சொந்த ஊருக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும் 'நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒன்பது நாட்களாக கரோனா நோய்த் தொற்று யாருக்கும் இல்லாத நிலையில், மேலும் ஐந்து நாட்களுக்குத் தொற்று இல்லாமல் இருந்தால், ஆரஞ்சு மண்டலமாக மாறும்' என்றார்.