ETV Bharat / state

கரோனாவால் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் வேலையின்மை அதிகரித்த நிலையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த கரோனா ஊரடங்கால் வேலையை இழந்து, யாசகம் பெற்றுவரும் யாசகர்கள் குறித்த ஒரு வலி நிறைந்த செய்தித் தொகுப்பு...

கரோனாவால் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

author img

By

Published : Sep 22, 2020, 12:17 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதனால் பல துறைகளில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து, பலர் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பல நடுத்தர வர்க்கத்தினர் யாசகர்களாக அவதாரமெடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருப்பினும் முதியோர்கள் தாங்கள் பெற்றெடுத்த மகன், மகளால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர்களாக உரிய அரவணைப்பின்றி சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களின் வாசல்கள் என அனைத்துப் பகுதிகளிலும் யாசகர்களாக தங்களின் நாள்களை நகர்த்தி வருகின்றனர்.

இது குறித்து நாமக்கல் பேருந்து நிலையத்தில் யாசகராக உள்ள டைட்டஸ் ஜெயராஜ் கூறுகையில், 'எனக்கு 73 வயதாகிறது. கரோனா ஊரடங்கினால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தங்கிவிட்டேன். சொந்த ஊருக்குச் செல்லவும் மனமில்லை. கரோனாவால் எனது வேலையும் பறிபோன நிலையில் தினசரி யாசகம் பெற்று, வாழ்க்கையை நடத்தி வருகிறேன்' எனத் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து மாற்றுத்திறனாளி யாசகர் ராஜூ கூறுகையில், 'நான் பார்வையற்றோர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளேன். முன்னதாக நான் பழைய பாடல்களைப் பாடி ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்து வந்தேன். ஆனால், தற்போது கரோனா தொற்றால் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டு, ஒருவேளை உணவிற்குகூட வழியின்றி தவித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார்.

இது குறித்து, மாற்றுத்திறனாளி யாசகர் இப்ராஹிம் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகளாக உள்ள எங்களை பணியமர்த்த பலர் யோசிக்கின்றனர். முன்னதாக நான் வியாபாரம் செய்து வந்தேன். கரோனா ஊரடங்கால் எனது வேலையை இழந்துவிட்டேன். இதனால், தற்போது யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறேன். அவ்வப்போது, சில தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்' என்றார்.

கரோனாவால் யாசகர்களாக மாறிய மக்களின் அவலக் குரல்

யாசகர்களுக்கு உணவளித்து வரும் தன்னார்வலர் மனோஜ், இது குறித்து கூறுகையில், 'ஊரடங்கிற்கு முன்னதாக நாமக்கல் நகரில் 25 யாசகர்கள் இருந்த நிலையில் தற்போது 50 யாசகர்கள் உள்ளனர். இவர்களுக்குத் தினந்தோறும் மூன்று வேளை உணவு வழங்கி வருகிறேன். அரசு இவர்களைப் பராமரிக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, அதற்கு தளர்வுகள் என அறிவித்த அரசு ஆதரவற்ற நிலையில், சாலையில் வாழ்க்கையை நடத்தி வரும் இவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இதையும் படிங்க: 'யாசகம் கேட்பது கூச்சமாக இருக்கிறது, வேலை கொடுத்தால் இனி வீதிக்குச் செல்லமாட்டோம்' - ஆதரவற்றவர்களுக்கு முகாமில் ஏற்பட்ட மனமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.