கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 65ஆயிரம் வாத்துக்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. நோய் மேலும் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலாக அறிவித்தது. மேலும் அப்பகுதியிலிருந்து முட்டை, கோழிகளை கொண்டு செல்ல தடை விதித்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு தினசரி ஒரு கோடி முட்டைகளும், 15 ஆயிரம் டன் கறிக்கோழிகளும் தொடர்ந்து அனுப்பப்படும் நிலையில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக அதற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் கோழிக்கறிகள் அதிகளவு தேக்கமடைந்ததால் அதன் விலை ஒரே நாளில் கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. பண்ணையில் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 92 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று (ஜன. 8) ஒரே நாளில் 14 ரூபாய் விலை குறைக்கப்பட்டு உயிருடன் ஒரு கிலோ 78 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையிலும் விலை குறைந்து 130 ரூபாய் முதல் 150 ரூபாய்வரை விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று நேற்று (ஜன. 7) முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...சொந்த அண்ணனுக்கு எதுவும் செய்யாத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு என்ன செய்வார் - முதலமைச்சர் பழனிசாமி