சீனா, உலக நாடுகளில் கோரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாநில சுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் வார்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மருத்துவ பணிகள் இயக்குநர் டாக்டர் குருநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கரோனா வைரஸ் வார்டில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கருவிகளையும் கரோனா தடுப்பு உடைகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயாராக இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனையையும், வளாகத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : ஈரோட்டில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு? - மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு