ETV Bharat / state

வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி; பொதுமக்கள் கோரிக்கை! - ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Fraud in buying a home lease; Public demand!

author img

By

Published : Dec 21, 2020, 9:43 PM IST

நாமக்கல் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் நாமகிரிப்பேட்டை பகுதியில் மூன்று தலைமுறையாக 70 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இதுவரை தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்டபோது அவர்களும் உரிய பதிலை அளிக்கவில்லை.

இதனை சாதகமாக பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவசாமி என்பவர், குடும்பத்திற்கு 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வீதம் 70 குடும்பங்களிடமிருந்து ரூ.98 லட்சம் வரை வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிவசாமியை உடனடியாக கைது செய்து மோசடி செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் ஏமாற்றப்பட்ட பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க கோரியும், ஏமாற்றிய சிவசாமியை கைது செய்யக் கோரியும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

இதையும் படிங்க:மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழப்பு - பொதுமக்கள் மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.