ETV Bharat / state

நகராட்சி அலுவலக குப்பை கிடங்கில் தீ விபத்து

நாமக்கல்: நகராட்சி அலுவலக குப்பைக் கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

fire
fire
author img

By

Published : Jan 21, 2020, 1:10 PM IST

நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் தினந்தோறும் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம்பிரித்து அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகிறது. மக்காத நெகிழிக் கழிவுகள் நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.

நகராட்சி அலுவலக குப்பைக் கிடங்கில் தீ விபத்து

இந்நிலையில், நேற்று இந்தக் குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவலறிந்ததும் விரைந்துசென்ற தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.

நெகிழிக் கழிவில் தீப்பற்றி வெளியேறிய புகையால் உடனடியாகத் தீயை அணைக்க முடியவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்தத் தீயால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

இதையும் படிங்க: சேலத்தில் 1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

Intro:நாமக்கல் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் கழிவு குப்பை கிடங்கில் தீ விபத்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.Body:நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் தினசரி சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக்குகள் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கபப்ட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பபட்ட நிலையில், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் அங்கு ஒரு பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை அந்த பகுதியில் திடீரென தீ பற்றி எரிவதை கண்ட நகராட்சி பணியாளர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்துதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும் புகை ஏற்பட்டு தீயை அணைப்பதில் தாமதம் ஏற்ப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.