ETV Bharat / state

உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறை வீரர்களுக்கு பாராட்டு..! - Namakkal,fire, department, appreciation, ceremony

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே காவிரிஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு குழந்தைகள் காப்போம் இயக்கத்தினர் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு
author img

By

Published : Aug 7, 2019, 12:48 AM IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு நாளில் அதே பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் அவரது மகன் கிருஷ்ணன் ஆகிய இருவரும் குளிக்கச் சென்றனர். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக நீரில்அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறை வீரர் மோகனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மோகன், இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்தி சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்தார்.

உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மோகனோடு இணைந்து தந்தையையும், மகனையும் உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் செயலை வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டிஜிபி காந்திராஜன் தலைமையிலான உயரதிகாரிகள் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதைதொடர்ந்து சேலத்தை சேர்ந்த லதா ரஜினிகாந்தின் குழந்தைகளை காப்போம் இயக்கத்தின் சார்பில் ( PEACE FOR CHIDDRAN ) சேலம் மாநகர் பொறுப்பாளர் ஸ்ரீவாராஹி, குமரேசன், பழனிவேலு ஆகியோர் தலைமையில்10-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

Intro:திருச்செங்கோடு அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை மகனை இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு சேலத்தைச் சேர்ந்த குழந்தைகளை காப்போம் இயக்கத்தின் சார்பில் பாராட்டு விழாBody:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆகஸ்ட் 3 ஆடிப்பெருக்கு நாளில் குளிக்கச் சென்ற ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்த தந்தை திருமூர்த்தி 40 மகன் கிருஷ்ணன் 9 இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் இருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்துவிட்டு ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்தி சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்து கொண்டிருந்தார். அதற்குள் திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், கோவிந்தசாமி, துரைராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இறையமங்கலம் பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்லூர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்து வந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இருந்ததை கண்டு மற்ற வீரர்களும் ஆற்றில் நீந்தி தந்தை மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் முதலுதவி செய்து அவர்கள் வந்த தீயணைப்பு வாகனத்திலேயே இருவரையும் இறையமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவத்தைநேரில் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் உழைப்பையும் தியாகத்தையும் பாராட்டினார்கள்

நேற்று சென்னையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டிஜிபி காந்திராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று சேலத்தை சேர்ந்த லதா ரஜினிகாந்தின் குழந்தைகளை காப்போம் இயக்கத்தின் சார்பில் ( PEACE FOR CHIDDRAN ) சேலம் மாநகர் பொறுப்பாளர் ஸ்ரீவாராஹி ,குமரேசன்,பழனிவேலு ஆகியோர் தலைமையில்10-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.