நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 214 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 149 மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். 9 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், சேந்தமங்கலம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேர், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 26 பேர், பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 27 பேர், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 28 பேர், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 29 பேர் என மொத்தம் 140 பேர் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்து விட்டேன்!