ETV Bharat / state

ஐந்த தலைமுறைகளாக நடத்தப்படும் 'மாடு பூ தாண்டும்' நிகழ்ச்சி! - மோகனூர் மாடு பூ தாண்டும்

நாமக்கல்: ஊனாங்கல்பட்டியில் தொட்டியநாயக்கர் சமூகத்தினர் சார்பில் ’மாடு பூ தாண்டும்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

mohanur
mohanur
author img

By

Published : Jan 18, 2020, 11:43 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஊனாங்கல்பட்டி, வாழவந்திநாடு, மேலப்பட்டி, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாயக்கர் சமூகத்தினர் பரவலாக வசித்துவருகின்றனர். அவர்கள், ஐந்து தலைமுறையாக ’மாடு பூ தாண்டும்’ நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காப்பு கட்டிய மறுநாள் முதல், ஊர் ஊராகச் சென்று நன்கொடை வசூல்செய்கின்றனர். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள்தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு ஆகியவற்றைக் கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.

தொடர்ந்து கோயில் மாடுகளை குறிப்பிட்ட இடத்திலிருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டைத் தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக, அவர்கள் கொண்டாடுகின்றனர். இந்த விழா மோகனூர் ஒன்றியம், கொமரிபாளையம், ஊனாங்கல்பட்டி, பரளி, ஒத்தையூர், நல்லையம்பட்டி, என்.புதுப்பட்டி, மேலப்பட்டி, லத்துவாடி, தொட்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி

அந்த வகையில் இன்று மோகனூரை அடுத்த ஊனாங்கல்பட்டி, வீரக்காரன்கோவிலில் நடந்த ’மாடு பூ தாண்டும்’ நிகழ்ச்சியில், ஊனாங்கல்பட்டி, சின்னபெத்தாம்பட்டி, குன்னத்துார், மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த, ஐந்து சாமி மாடுகள் பங்கேற்றன. மூன்று முறை ’மாடு பூ தாண்டும்’ போட்டி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. சின்னபெத்தாம்பட்டி கோயில் மாடு இப்போட்டியில் வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்த கிருஸ்தவ பெண்கள்

Intro:நாமக்கல் அடுத்துள்ள மோகனூரில் ஐந்து தலைமுறைகளாக மாடு பூ தாண்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது
Body:நாமக்கல் மாவட்டத்தில் ஊனாங்கல்பட்டி, வாழவந்திநாடு, மேலப்பட்டி, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாய்க்கர் சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். அவர்கள், 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காப்பு கட்டிய மறுநாள் முதல், ஊர் ஊராக சென்று நன்கொடை வசூல் செய்கின்றனர். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள்தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.
தொடர்ந்து கோவில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக, அந்த சமூகத்தினர் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழாவில் மோகனூர் ஒன்றியம், கொமரிபாளையம், ஊனாங்கல்பட்டி, பரளி,ஒத்தையூர், நல்லையம்பட்டி, என்.புதுப்பட்டி, மேலப்பட்டி, லத்துவாடி, தொட்டிப்பட்டி, எஸ்.வாழவந்தி, மேலப்பட்டி, திண்டமங்கலம், வடக்குப்பட்டி ஆகிய கிராமங்களில் தொன்று தொட்டு நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று மோகனூர் அடுத்த ஊனாங்கல்பட்டி, வீரக்காரன்கோவிலில் நடந்த மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியில், ஊனாங்கல்பட்டி, சின்னபெத்தாம்பட்டி, குன்னத்துார், மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி சேர்ந்த, ஐந்து சுவாமி மாடுகள் பங்கேற்றன. மூன்று முறை மாடு பூ தாண்டும் போட்டி நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. அதில், சின்னபெத்தாம்பட்டி கோவில் மாடு வெற்றி பெற்றது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.