ETV Bharat / state

கறவை மாடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்! - Farmers involved in road blockade with dairy cows

நாமக்கல்: விவசாய நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை மறித்து தடுப்புகளை அமைத்ததை கண்டித்து கறவை மாடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

றவை மாடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
றவை மாடுகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
author img

By

Published : Dec 24, 2020, 5:07 PM IST

நாமக்கல்: எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரி கோம்பையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களது நிலத்தில் விவாசயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொய்யேரி கோம்பைக்கு செல்லும் பாதையானது தங்களுக்கு செந்தமானது எனக்கூறி பாலசுப்பிரமணியமும், பழனிச்சாமி என்பவரும் ஆக்கிரமித்து வழித்தடத்தில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கறவை மாடுகளுடன் வந்து பொன்னேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி காவல்துறையினர் விவசாயிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் யாராவது நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருளண்ணன் தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் எருமப்பட்டி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மீண்டும் விலை உயர்ந்த முட்டை விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.