மானாவரி பயிரான பாசிப்பயறு நாமக்கல் மாவட்டத்தில் புதுசத்திரம், எலச்சிபாளையம், ராசிபுரம், நாமக்கல் வட்டாரப் பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சித்திரை, புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்படும் பாசிப்பயறு 90 நாள்களில் அறுவடைக்கு தயாராகும்.
இந்தாண்டு புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் அதிகளவு பாசிப்பயறு விதைப்பு செய்தனர். சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் விதைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக பாசிப்பயறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக அதிகளவு பூக்கள் உதிர்ந்து அதிகளவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இதனால் காய் பிடிப்பு திறன் பாதிக்கப்பட்டு விளைச்சலும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து பூச்சிகளை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்குவதோடு, காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:வறட்சி, பூச்சி தாக்குதலால் கேழ்வரகு சாகுபடி வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை