ETV Bharat / state

நாமக்கல்லில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை! - கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை

நாமக்கல்: கடன் தொல்லையால்  தந்தை, தாய் மற்றும் மகள் உட்பட மூவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Family committed to sucide
Family committed to sucide
author img

By

Published : Dec 2, 2019, 11:36 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், கூத்தம் பூண்டி ஊராட்சி சாயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (55). ரிக் இயந்திர உரிமையாளர். இவரது மனைவி நிர்மலா (47) இவர்களுக்கு நவீன் குமார் (25) என்ற மகனும் கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் செளமியா (21) என்ற மகளும் உள்ளனர். மகன் நவீன் குமார் தொழில் நிமிர்த்தமாக சோலாப்பூர் சென்றிருந்தார்.

இந்நிலையில்,அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செளமியா தனது சித்தப்பா அன்பழகன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு; அப்பா, அம்மா, நான் என மூவரும் கடன் தொல்லையால் சல்பாஸ் என்ற மாத்திரையை விழுங்கியதாகக் கூறியுள்ளார்.

விரைந்து வந்து அன்பழகன் பார்த்த போது நிர்மலா இறந்து போயிருப்பதையும், அண்ணன் மோகன், அவரது மகள் செளமியா ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு, இருவரையும் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு சென்ற போது மோகன் வழியில் இறந்து விட, செளமியாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை

தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி செளமியாவும் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷம் அருந்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சாயக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையும் படிங்க:

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

Intro:தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்,கடன் தொல்லையால் தந்தை, தாய் மற்றும் மகள் உட்பட மூவர் விஷமருந்தி தற்கொலை
Body:நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அடுத்துள்ள சாயகாடு பகுதியில் வசிப்பவர் மோகன். இவர் ரிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் செளமியா(21) என்ற மகளும் உள்ளனர். செளமியா கோவையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் ரிக் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் கடன் பிரச்சனையாலும் மோகன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன், நிர்மலா மற்றும் மகள் செளமியா ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காலை நீண்ட நேரமாகியும் மோகனின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது மூவரும் விஷமருந்தியது கண்டு வேலகவுண்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர். இதில் செளமியா மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேலகவுண்டப்பட்டி போலீசார் கடன் பிரச்சனையால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷமருந்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சாயக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.