நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. அப்போது, முட்டை விலை 20 காசு உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை 3 ரூபாய் 65 காசுகளில் இருந்து 10 காசும், 29ஆம் தேதி 15 காசும் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் 20 காசு விலை உயர்த்தப்பட்டதில் 4 ரூபாய் 10 காசுக்கு முட்டை விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஐந்து நாள்களில் முட்டை விலை தொடர்ந்து 45 காசு உயர்ந்துள்ளது.
இது குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் முட்டை நுகர்வு அதிகரித்தும் தேவை ஏற்பட்ட நிலையில், கேரளாவிலும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.