நாமக்கல் மண்டலத்தில் ஐந்து கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்துவருகிறது.
அதேபோல் கறிக்கோழி விலையும் 14 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வட மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் முட்டை, இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டு பண்ணைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே ஒரே நாளில் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களிலும் விலை மேலும் குறையக்கூடும் என்றனர்.