ETV Bharat / state

அரசியலுக்காக வீட்டை முற்றுக்கையிடுகின்றனர்: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: சிலர் அரசியலுக்காக தன்னுடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதாகவும், இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிலர் திட்டமிட்டு போராட்டம் செய்கிறார்கள் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Eb minister Thangamani press meet
Eb minister Thangamani press meet
author img

By

Published : Feb 7, 2021, 6:33 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 874 பயனாளிகளுக்கு 15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 192 ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவிகளை வழங்கினர்.

இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, கரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமண உதவி, தாலிக்கு தங்கும் வழங்குதல் திட்டத்தின் கீழ் 1.15 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆயிரத்து 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இன்னும் இரண்டு வாரத்தில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய அரசாணைப்படி நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு, மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு

எந்த மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட தொகை வரவில்லையோ அந்த விவசாயிகள் தங்களது விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினால் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இதுவரை அந்த பட்டியலை விவசாயிகள் வழங்கவில்லை.

ஆனால் சிலர் அரசியலுக்காக என்னுடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது விவசாயிகளின் அரசு, முதலமைச்சர்கூட விவசாய கடனை விவசாயிகளை கேட்காமலேயே 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக சிலர் திட்டமிட்டு போராட்டம் செய்கிறார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

”விவசாய கடன் ரத்து தேர்தலுக்கானது விவசாயிகள் நலனுக்காக அல்ல” - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.