ETV Bharat / state

2000 மெகாவாட் மின்சாரம் - மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல்: கோடை காலம் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய இரண்டாயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

minister thangamani press meet in namakkal, அமைச்சர் தங்கமணி பேட்டி
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி
author img

By

Published : Jan 25, 2020, 7:46 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான ஒப்பந்தப் புள்ளி கோரல் பணிகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.

62வது கிராமி விருது வழங்குனர்கள் பட்டியல் வெளியீடு

மேலும், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அரசு தனது கடமையை செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் 99 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், கோடை காலம் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய இரண்டாயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

Intro:கோடை காலம் வர உள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டி
Body:அனைத்து துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாநில மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி "நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரிக்கான டெண்டர் பணிகள் முடிந்து விட்டதாகவும் , விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் துவங்கும் என்றும், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அரசு தனது கடமையை செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் 99 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கோடை காலம் வர உள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.