நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய மூலிகை சுற்றுலா தலமாக விளங்கி வரும் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கு முக்கிய சுற்றுலா தலமாக மாசிலா அருவி, ஆகாய கங்கை, நம் அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவில் ஆகியவை உள்ளது.
இதில் அனைத்து வயதினரும் சென்றுவரும் வகையில் மாசிலா அருவி அமைந்துள்ளதால் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம்.
இவ்வாண்டு கொல்லிமலை பகுதியில் போதிய மழையின்மையால் அருவிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து ஊற்று நீர் போல் மிக குறைந்தளவே அருவியில் நீர் வடிகிறது.
இதனால் அப்பகுதியில் விவசாயிகளும் போதிய நீரின்றி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: " தலைவி டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடி - OTT வெளியீடு வாய்ப்பில்லை" - கங்கனா !