ETV Bharat / state

திமுக பிரமுகரின் தற்கொலை குறித்த திடுக்கிடும் தகவல்!

நாமக்கல்: திமுக பிரமுகரும், டாக்டருமான ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

doctor anand
author img

By

Published : Aug 27, 2019, 11:49 PM IST

நாமக்கலில் திமுக பிரமுகரும், மருத்துவருமான ஆனந்த் அவரது தோட்டத்து வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது இவரது தற்கொலை குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது, "வழக்கம்போல் மருத்துவமனையில் ஆனந்த் வெளிநோயாளிகளை பார்வையிடுவதற்கு மதியம் 12 மணியளவில் வருவார். அதேபோல் மருத்துவமனைக்கு வந்தார் ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண்களுக்கு எப்போதும் போல் இல்லமால் முன்னதாகவே சம்பளம் தந்துள்ளார்.

மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டீர்கள் என்று அப்பெண்கள் கூறியதற்கு, எப்பொழுதும் நான்தான் சம்பளம் தருவேன் இப்போதும் நான்தான் தருகிறேன் என்று கூறியுள்ளார். சம்பளத்தை கொடுத்துவிட்டு இனிமேல் வெளி நோயாளிகளை நான் பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் பரமத்திவேலூர் அடுத்துள்ள செங்கப்பள்ளியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து தனது காரில் புறப்பட்டுள்ளார். காரில் செல்லும்போது ஆனந்த் அவரது பெரியப்பா மகன் முரளிக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். தகவலை கேட்ட முரளி தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு, ஆனந்தின் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தோட்டத்தில் தண்ணீர் தொட்டி அருகில் அமர்ந்திருந்துள்ளார். அருகாமையில் உறவினர்கள் வருவதை கண்டு கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் கழுத்தில் வைத்து உறவினர்கள் கண் முன்னாடியே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்றனர்.

இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அருகாமையில் உள்ள ஆம்புலன்ஸ், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவரின் தற்கொலையின் காரணத்தை குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.