உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான நாமக்கல் அரங்கநாதர், நரசிம்மர் திருக்கோயில்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூடுவதற்கு தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயிலில் தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு மட்டும் அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் நெரிசலுடன் காணப்படும் கோயில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்களான கொல்லிமலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, ஜேடர்பாளையம் தடுப்பணை ஆகிய பகுதிகளையும் மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: ஜெகந்நாத் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடு