இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் நடமாடும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது. இருப்பினும் பலர் சாலைகளில் சுற்றித் திரிந்தனர். அவ்வாறு சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். மேலும் நூதன தண்டனையும் வழங்கினர். ஆனாலும் சில மக்கள் சாலைகளில் ஆங்காங்கே நடமாடி கொண்டுதான் உள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 50க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 39 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஊரடங்கு தடை உத்தரவை மீறி கடைகள், பொது இடங்களில் கூட்டமாக நின்றிருந்த 70க்கும் மேற்பட்டவர்களை இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம் என எழுதி கையொப்பம் பெற்றும் எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கடலூரில் 150 பேர் மீது வழக்கு; 50 வாகனங்கள் பறிமுதல்