நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் இந்து கடவுள் ராமர், சீதை ஆகியோரின் படங்களை அவமரியாதை செய்யும் விதமாக செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றார்.
ரஜினிகாந்த் கூறிய இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற கருத்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் பெரியார் குறித்த தவறான புரிதலை உருவாக்குகிறது. ஆகவே, பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதாரமில்லாத தகவலைப் பரப்பிய ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்