ETV Bharat / state

தற்கொலை செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ஆட்சியர் - நாமக்கல் கந்துவட்டி சம்பவம்

நாமக்கல் : கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தில் உயிர்தப்பிய இரு குழந்தைகளை சந்தித்து ஆட்சியர் மெகராஜ் ஆறுதல் கூறினார்.

Collector said to comfort
Collector said to comfort
author img

By

Published : Aug 24, 2020, 5:56 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசம்பாளையம் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி மீட்டர் வட்டி கொடுமையாலும், கடன் வாங்கிக் கொடுத்தவர்கள் தகாத வார்த்தையால் பேசியதாலும் விசைத்தறித் தொழிலாளியான சுப்பிரமணியும், அவரது மனைவி மேனகா, குழந்தைகள் பூஜா ஸ்ரீ (14) நவீன்குமார் (12) ஆகியோருடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

இச்சம்பவத்தில் கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர்களது குழந்தைகள் பூஜாஸ்ரீ, நவீன்குமார் ஆகியோர் உயிர் பிழைத்தனர்.

உயிர் தப்பிய குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்கு பின் கோம்பைக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று (ஆக.24) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அழுதபடி தங்களது குறைகளை கூறிய குழந்தைகளை தேற்றிய ஆட்சியர் மெகராஜ் அறிவுரையும் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து உதவிகளை கிடைக்க செய்வதாக உறுதியளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.