நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 790 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஒரு மாத காலம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, தகுதியான மனுக்களை ஆய்வு செய்து, அந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
மேலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரை 24 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதில், 8000 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்க உள்ளதாகவும், பல நலத்திட்ட உதவிகளை அரசு நேரடியாக மக்களிடம் சென்று வழங்குவதால் இதைவிடச் சிறந்த அரசு இருக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்