ETV Bharat / state

இலங்கை வரை சென்ற குழந்தை விற்பனை! பகீர் தகவல் - நாமக்கல்

நாமக்கல்: குழந்தைகளை பணத்திற்கு விற்பனை செய்த விவகாரம் வெளியாகி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேலம் குழந்தையை இலங்கை தம்பதியினருக்கு விற்றதாக நாமக்கல் வழக்கறிஞர் புகார் மனு அளித்தார்.

குழந்தைகள்
author img

By

Published : Apr 28, 2019, 1:16 PM IST

Updated : Apr 28, 2019, 3:15 PM IST

நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு இன்று ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'இலங்கையைச் சேர்ந்த குமாரசாமி, பரிமளாதேவி தம்பதியினர் 2014ஆம் ஆண்டு தங்களுக்கு குழந்தை இல்லை என்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளனர்.

அப்போது, தாராபுரம் பாலாஜி சூர்யா மருத்துவமனை உடந்தையுடன் பரிமளாதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக பொய்யாகக் கூறி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்களுடன் நடந்த பேரத்தின் முடிவில், இலங்கை தம்பதிக்கு 2014 பிப்ரவரி 24 பெண் குழந்தை பிறந்ததாகவும், அதற்கு பாலாஜி சூர்யா மருத்துவமனையின் மருத்துவர் லோக நாயகி சான்றிதழ் அளித்ததாகவும் கூறி வேறு தம்பதிக்கு பிறந்த குழந்தையுடன் அத்தம்பதி இலங்கை சென்றுவிட்டது.

தாராபுரம் பாலாஜி சூர்யா மருத்துவமனை

ஆனால் அந்தப் பெண் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் வடிவேல், அமுதா தம்பதியினருக்கு பிறந்திருக்கிறது. காலையில் பிறந்த குழந்தையை இலங்கை தம்பதியிடம் ரூ.4 லட்சத்துக்கு விற்றுவிட்டு, குழந்தையை பெற்றவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளனர்' என ராசிபுரம் குழந்தை விற்பனையாளர் அமுதா மீது காவல் துறையினரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு

மேலும் இந்த வழக்கில் மருத்துவர்கள், செவிலியர் என பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் மருத்துவக் குழு அமைத்து விசாரிக்கவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Intro:பெண் குழந்தையை இலங்கையில் உள்ள தம்பதியினருக்கு விற்ற அமுதா

Body:தமிழகத்தில் தமிழகத்தையே உலுக்கிய நாமக்கல் ராசிபுரம் பச்சிளங்குழந்தை விற்பனை வழக்கில் இன்று மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு இன்று ராசிபுரம் துணை காவல் ஆய்வாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் குழந்தை கடத்தல் குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட அமுதா இலங்கையில் உள்ள ஒரு தம்பதியினருக்கு 4 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஒரு பெண் குழந்தையை விட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த குமாரசாமி மற்றும் பரிமளாதேவி தம்பதியினருக்கு தங்களுக்கு குழந்தை இல்லை என்பதற்காக தமிழகம் வந்துள்ளனர். இங்கு தாராபுரம் பகுதியில் பாலாஜி மருத்துவமனையில் அவர்கள் பிரசவ வலி ஏற்பட்டதாக கூறி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் 24.02.2014 அன்று தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் இதற்கு தாரமங்கலம் பாலாஜி சூர்யா மருத்துவமனை மருத்துவர் லோகநாயகி சான்றிதழ் அளித்து உள்ளதாகவும் கூறி அந்த குழந்தையுடன் இலங்கை சென்றுவிட்டனர். இந்த பெண் குழந்தை சேலத்தை சேர்ந்த வடிவேல் மற்றும் அமுதா தம்பதியருக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்துள்ளது. காலை குழந்தை பிறந்த நிலையில் மதியத்திற்குள் அந்த குழந்தை 30 ஆயிரத்திற்கு ராசிபுரம் குழந்தை விற்பனையாளர் அமுதா மூலம் குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு விமானத்தில் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்பதால் எளிதில் குழந்தை இலங்கைக்கு விமானத்தில் கொண்டுசென்று விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் மருத்துவ குழு அமைத்து விற்கப்பட்ட குழந்தைகளையும் நேரில் அழைத்து வந்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Conclusion:
Last Updated : Apr 28, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.