ETV Bharat / state

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை:கைதானவர்களின் காவல் நீட்டிப்பு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதானவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
author img

By

Published : Jun 6, 2019, 4:40 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன் என்பவரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதானவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி வரை காவலை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் கைதானவர்கள் 11 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் காவல்துறையினர் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட 11 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றவாளிகள் 11 பேரையும் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

Intro:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதானவர்கள் 11 பேருக்கும் ஜூன் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Body:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்யப்பட்டார்.

பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,அருள்சாமி,செல்வி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கைதானவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தமிழக டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.

இந்த சிபிசிஐடி போலீசார் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேலத்தை சேர்ந்த சாந்தி என்பவரையும் பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரையும் அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார் ஆகியோரை கைதுசெய்தனர். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்கள் 11 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவல்லி உட்பட 11 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டன. இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி கருணாநிதி குற்றவாளிகள் 11 பேரையும் வருகின்ற ஜூன் 20 ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.