நாமக்கல்: ஈரோடு சூரம்பட்டி நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் சைபியுல்லா. இவர், ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு செல்வதற்கு, இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்செங்கோடு சாலையில் அலமேடு பகுதியில் ரயில் மேம்பாலத்தில் முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த தனியார் பேருந்தினை கவனிக்காமல் பேருந்தின் முன்பக்கம் மோதியதில் சைபியுல்லா தூக்கி வீசப்பட்டார்.
சிகிச்சை பலின்றி உயிரிழந்தார்
இதைத்தொடர்ந்து அவரை பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சைபியுல்லா இன்று (செப். 1) பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே, சைபியுல்லா தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அது இப்போது வெளியாகி காண்போரை பதற செய்கிறது.
இதையும் படிங்க: சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை - தந்தை உள்பட இருவர் கைது