ETV Bharat / state

அதிவேகமாக வந்த பைக்... பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சி

நாமக்கல் அருகே புதன்சந்தை பகுதியில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அரசு பேருந்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அதிவேகமாக வந்த பைக்... பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Jan 4, 2023, 11:00 PM IST

அதிவேகமாக வந்த பைக்... பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சிகள்

நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் நபர் ஒருவர் வேகமாக வந்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த அரசு பேருந்து திடீரென இடது புறமாக திரும்பியது. இதனை கவனிக்காத இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் அதிவேகமாக அரசு பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோதினார்.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவரது இருசக்கர வாகனம் பேருந்து சக்கரத்தில் சிக்கி உருக்குலைந்து போனது. மேலும் இந்த சம்பவம் நடைப்பெற்ற பகுதி நல்லிபாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விபத்தில் சிக்கியவர் யார் என்பதும் அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் சிதைந்த‌ வாகனமும் இதுவரை நல்லிபாளையம் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாததால் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:உடல் எடையைக் குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.