சென்னை தியாகராய நகர், செவாலிய சிவாஜி சாலையில் அமைந்துள்ள 8 மாடிகள் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ் மாநில கட்சி அலுவலகமான பாலன் இல்லம் அமைந்துள்ளது.
இந்த கட்டடத்தை பற்றி பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நபர்களால் அவதூறான படங்களும், செய்திகளும் வெளியிட்டு களங்கப்படுத்துவதை கண்டித்தும், முகநூலில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவிட்டு வருவதை கண்டித்தும் நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்துகொண்டு, அவதூறான செய்தி பரப்புபவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.