நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (மார்ச் 23) அவர் காந்தி வேடமணிந்து, தனது சின்னமான கிரிக்கெட் பேட், ஹெல்மெட்டுடன் நாமக்கல் சங்கரன்சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில் , “ மொகுல் சோக்ஸ், விஜய் மல்லையா உள்ளிட்டோரின் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தொகையை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களின் 100 விழுக்காடு வாக்களிப்பை உறுதி செய்ய, வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்கப்போகிறேன். இதனால் எனது வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, ரூ. 46 கோடி மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதனை படித்து அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் உயர் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி, மனுவை பரிசீலிப்பதாக தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க வங்கிக்கே சென்று கடன் கேட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மரைக்காயர் படத்துக்கு தேசிய விருது, மோகன் லால் நெகிழ்ச்சி!