ETV Bharat / state

கறிக்கோழி விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு! - Namakkal District News

நாமக்கல்: கடந்த 10 நாள்களில் கறிக்கோழியின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கறிக்கோழி விலை வீழ்ச்சி
கறிக்கோழி விலை வீழ்ச்சி
author img

By

Published : Jun 18, 2020, 12:42 PM IST

கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உயிருள்ள கோழியின் விலை, கிலோ ரூபாய் 85இலிருந்து ஐந்து ரூபாய் குறைந்து, 80 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் கிலோ ஒன்றுக்கு 53 ரூபாய் வரை கறிக்கோழியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த கறிக்கோழியின் விலை குறைந்துள்ளது.

அதன்படி கடந்த எட்டாம் தேதி ஒரு கிலோ உயிருள்ள கோழி 133 ரூபாயிலிருந்து, ஒன்பது, 10, 11 ஆகிய தேதிகளில் தலா ஐந்து ரூபாயும், 12ஆம் தேதி எட்டு ரூபாயும் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து கறிக்கோழியின் உற்பத்தி அதிகரித்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் 14ஆம் தேதி இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. தொடர்ந்து 16ஆம் தேதி ஒரே நாளில் 18 ரூபாயும், 17ஆம் தேதி ஐந்து ரூபாயும் குறைக்கப்பட்டு 85 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டு, ஒரு கிலோ உயிருள்ள கோழி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, ”உற்பத்தி அதிகரித்த நிலையில் விற்பனையில் சரிவு ஏற்பட்டதாலும், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் அங்கு விற்பனை சரிய வாய்ப்பு உள்ளதால், மற்ற பகுதிகளில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இவ்விலையானது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் நாமக்கலில் முட்டை ஒன்று நான்கு ரூபாய் 30 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரப்தீப் கவுர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.