ETV Bharat / state

நாமக்கல்லில் விளையாடச் சென்ற சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு - Boy died drowning pond in Namakkal

நாமக்கல்: கூலிப்பட்டி அருகே நண்பர்களுடன் விளையாடச் சென்ற சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட சென்ற சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Oct 13, 2020, 1:27 PM IST

நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் நந்தகுமார் (16). இவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் (அக். 11) நந்தகுமார் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாடச் சென்றுள்ளார்.

இரவு ஆகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனின் நண்பர்கள் வீடுகளில் தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று (அக்.12) இரவு கல்குவாரி குட்டையில், சிறுவன் சடலமாக மிதந்துள்ளார். இதனைக் கண்ட நபர் ஒருவர் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் குட்டையில் இறங்கி சிறுவன் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், "நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த சக நண்பர்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்" எனத் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு - காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.