நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அவனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கடந்த 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் அந்தப் புகாரை வாங்க மறுத்ததாக கூறி பெற்றோர்கள் கடந்த 23ஆம் தேதி மனமடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
இதையடுத்து,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி, இந்த வழக்கு பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனையும், சிறுமியையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில், சிறுவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து நாமக்கல் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:வயலில் நாற்று நடும்போது மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு