நாமக்கல்: நாமக்கல்லில் இன்று (ஜன.24) பாரதிய ஜனதா கட்சியின் அணி, பிரிவு மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக அண்மையில் திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை குறித்து இழிவாக பேசியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி கண்டிக்க வேண்டும். இல்லையெனில், 'அயோக்கியன் ஸ்டாலின் என்பதை பட்டியலிடுவேன், ஆராஜகவாதி ஸ்டாலின் என்பதை பட்டியலிடுவேன். வாயை மூடு இல்லையெனில் உன் நாக்கு துண்டாக்கப்படும் ஜாக்கிரதை என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது; அவர் ஒரு பொய்யன் என்பதை வெளிப்படுத்துவேன்" என்றார்.
கே.பி. ராமலிங்கத்தின் இந்தப் பேச்சை கேட்ட பாஜகவினர் அதிர்ச்சையடைந்தனர்.
இதையும் படிங்க: கருணாநிதி பரம்பரைக்கே முதலமைசர் ஆகும் அதிஷ்டம் கிடையாது: அமைச்சர் கருப்பணன்