நாமக்கல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடுதான் இந்தியா முழுவதும் நிலவிவருவதாகவும், கடந்த 9 வருட அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு உரிமைகள் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதன் சூட்சுமம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
எதிர்கட்சிகள் மீது முதலமைச்சர் வேண்டுமென்றே குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், வேல் யாத்திரை விசயத்தில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை வேடம் போடுவதாகவும் தெரிவித்த அவர், வடநாட்டில் பாஜக அரசியல் செய்வதுபோல் தமிழ்நாட்டில் செய்ய முடியாது என்றும் பாஜகவின் கொள்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய வாக்காளர் சேர்ப்புப் பணி: அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்