பள்ளிக்கு வருகைதரும் ஆசிரியரின் பதிவேட்டை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறையை இந்த ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 101 மேல்நிலைப் பள்ளிகள், 68 உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிகள் என 169 பள்ளிகளில் நேற்று முதல் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி எட்டு இலக்க குறியீட்டு எண்ணுடன் விரல் ரேகையை கணினியில் பதிவு செய்து 169 பள்ளிகளில் பணியாற்றும் 3474 ஆசிரியர்கள் பயோமெட்ரிக் மூலம் தங்களது வருகையை பதிவு செய்தனர். இதன்மூலம் பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்களை உயர் அலுவலர்கள் உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.