ETV Bharat / state

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு - பொதுத்துறை வங்கி இணைப்பு

நாமக்கல்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றிணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத் துறை வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

bank worker protest
author img

By

Published : Oct 21, 2019, 9:00 AM IST

நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் இன்றைய பொதுத்துறை வங்கிகளின் நிலை, பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதால் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருணாசலம், இந்திய நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து 12 பொதுத்துறை வங்கிகளாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனைக் கைவிட வலியுறுத்தி அக்டோபர் 22ஆம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் தங்களின் போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவது உறுதி

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்றும் பொருளாதார வீழ்ச்சி சரிசெய்யப்படும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றிணைக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி வரும் 22-ம் தேதி பொது துறை வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்Body:தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றிணைக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி வரும் 22-ம் தேதி பொது துறை வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொது செயலாளர் அருணாசலம் நாமக்கல்லில் பேட்டி

நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சிறப்பு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இன்றைய பொதுத்துறை வங்கிகளின் நிலை, பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவைகள் குறித்து பலரும் பேசினார் . இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வங்கி ஊழியர்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் இந்திய நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து 12 பொதுத்துறை வங்கிகளாக மாற்ற மத்திய முடிவெடுத்துறுப்பதை கைவிட வலியுறுத்தி வரும் 22ம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.