ETV Bharat / state

‘உண்டியல் காசு எங்களுக்கே சொந்தம்’ - சொந்தம் கொண்டாடும் பூசாரிகள்!

நாமக்கல்: தமிழ்நாட்டிலுள்ள கோவில்களிலிருக்கும் உண்டியல்களில் விழும் காணிக்கைகளை கோயில் பூசாரிகளுக்கு ஊதியமாக வழங்க வேண்டும் என பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்படுள்ளது.

தமிழ்நாடு பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு
author img

By

Published : Jun 19, 2019, 7:36 PM IST

நாமக்கல்லில் இன்று தமிழ்நாடு பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து பூசாரிகள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பூசாரிகள் நலசங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு, "பூசாரிகள் நலவாரியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம்தோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை" என குற்றம்சாட்டினார்.

மேலும், "பூசாரிகளின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, ஊதியத்தை வருவாய்துறை மூலமாக இல்லாமல், கோயில்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளைக் கொண்டு வழங்க வேண்டும். மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களை காலை 6 மணிக்கு திறந்து இரவு 9 மணி வரை செயல்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Intro:கோவில் பூசாரிகளுக்கு ஊதியத்தை கோவில் உண்டியலில் உள்ள காணிக்கையை வழங்க வேண்டும் - பூசாரிகள் நலச்சங்கம்

Body:நாமக்கல்லில் இன்று தமிழ்நாடு பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் பூசாரிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு "பூசாரிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள நலவாரியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம்,இலவச வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டந்தோறும் மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. ஆனால் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பூசாரிகளையும் கோரிக்கையை 12 வாரத்திற்குள் நிறைவேற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். தற்போது 12 வாரங்கள் அவகாசம் முடிவடைய உள்ளது. தமிழக அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பூசாரிகளின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய ஊதியத்தை வருவாய் துறை மூலமாக இல்லாமல் கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை கொண்டு ஊதியம் வழங்க வேண்டும். மேலும் அதிக அளவு பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோவில்களை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்". இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.