நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேவுள்ள இடையன் பரப்பை பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு அச்சம் காரணமாக, அவர் இன்று (செப்டம்பர் 12) இரவு 9:30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் நீட் அச்சம் காரணமாக நிகழ்ந்த மூன்றாவது மரணமாகும்.
முன்னதாக, மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ என்ற மாணவியும், தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவரும் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டனர்.
குறிப்பு: தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காத்திருக்கின்றன.
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060