நாமக்கல்: பூங்கா சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கல்விக் கடன்கள், பயிர்க் கடன்களை ரத்துசெய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், மகளிர் குழுவினருக்கு உரிய கடன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தங்கமணி, ”தமிழ்நாட்டில் ஆட்சி செய்கின்ற இந்த அரசின் மீது பொதுமக்களுக்கு எந்த அளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதற்கு இங்குக் கூடிய மக்கள் கூட்டமே உதாரணம்.
கிரிப்டோ கரன்சி குறித்து எதுவும் தெரியாது என ஏற்கனவே கூறியுள்ளேன். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் ஆட்சியில் உள்ளவர்கள் மின்சாரத் துறையில் ஊழல் செய்து அதை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துவிட்டு என் மீது குற்றச்சாட்டு சுமத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு: இதுவரை கிடைத்தது என்ன?