நாமக்கல் அடுத்துள்ள பொம்மைகுட்டைமேட்டில் திமுக சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று (ஜூலை.04) நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ”பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார்.
பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என கூறி வருகிறோம். அதனால், பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன். உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு தமிழ்நாடு என்று கேட்க வைத்து விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார்.
இந்த கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிட்டால் தனிதமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்னொடுகிறதா என்ற கேள்வி உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: பொதுக் குழுவுக்கு தடை: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை