நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் அக்டோபர் 2ஆம் வரவிருக்கும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் கிராம மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்திற்கு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காந்தி வேடமிட்ட ரமேஷ் என்ற இளைஞர் கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்.
பொதுமக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்று வித்தியாசமான முறையில் அழைப்பு விடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: